கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதாந்தம் வட்ஸ்அப் இந்தியா நிறுவனம் முடக்கி வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் இதேபோன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 23 இலட்சம் கணக்குகளை வட்ஸ்அப் முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version