தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் செப்டெம்பர் 15ஆம் திகதி பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் சுமார் 100,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில்,நேற்று(02.10.2022) சுமார் 10,000 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை ஒக்டோபர் 1 ஆம் திகதி சிறுவர்கள் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு 11,752 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட நுழைவுச்சீட்டுகளை வாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,“வார நாட்களில் இந்த கோபுரம் நண்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.

இந்த தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விலை 500 ரூபாவாகும். மேலும், தாமரை கோபுரம் திறக்கப்பட்ட முதல் நாள், 2.1 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்தது.”என்று கூறியுள்ளார்.

Share.
Exit mobile version