இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி பொலிஸார் உட்பட 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் விளையாட்டரங்கை விட்டு மக்கள் வெளியேற முற்பட்ட போது இந்த நெரிசல் ஏற்பட்டது.

பெர்செபயா சுரபயா அணிக்கு எதிரான போட்டியில் அரேமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து மைதானத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நெரிசல் காரணமாக 180 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணை முடியும் வரை குறித்த தொடரின் அனைத்து போட்டிகளையும் நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

Share.
Exit mobile version