இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார்.

இன்று காலை ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு முதல் இலங்கையின் குறிப்பாக சிங்கள சினிமா துறையில் சிறந்த நடிகராக விளங்கி வந்த 41 வயதான இவர், பல திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.

Share.
Exit mobile version