காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது.

காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அதன் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய தூதுவர் கோபால் பக்லே கலந்துசிறப்பித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ரகுபதி ராக ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டது.

Share.
Exit mobile version