அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய ‘இயான்’ புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் ‘இயான்’ புயல், ஃபுளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளை மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் தாக்கியது.

இந்த புயல் கடந்து சென்றுள்ள போதிலும், கடந்து சென்ற பாதைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. புயல் காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீதி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, 25 லட்சம் பேர் மின்சாரமின்றியும், தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனார்.

இதனிடையே, இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் மின்சார வசதி பாதிப்பால் அவதியுற்றுள்ளனர்.

Share.
Exit mobile version