சந்தையில் கொள்வனவு செய்வதற்கு போதிய எரிவாயு சிலிண்டர்கள் இல்லாவிட்டாலும் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு எரிவாயு கிடைப்பதாக மாத்தறை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
10,000 முதல் 12,000 ரூபா வரையிலான விலையில் காஸ் சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் காஸ் விநியோகஸ்தர்கள் காஸ் கையிருப்பை மறைத்து இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு காஸ் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனையோர் சந்தையில் எரிவாயுவை கொள்வனவு செய்து மீண்டும் விற்பனை செய்வதன் மூலம் ரூபா 4000 முதல் 5000 வரை இலாபம் ஈட்டுவதாக மாத்தறை எரிவாயு பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாத்தறை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.