அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயன் புயல் நெருங்கி வருவதால் இலட்சக் கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கிய இயன் புயலால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, மீனவ கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் இயன் புயல் புளோரிடாவை நோக்கி நகருவதால், சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக Key West pier கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மக்கள் கடலில் குளித்தும் செல்பி எடுத்தும் குதூகலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.