இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரை இன்று (27) பகல் சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கைதான நபர் களனி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (27) காலை டுபாயில் இருந்து வந்த இந்திய பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் குறித்த தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டைப் பையில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள சுங்க வளாகத்தை கடக்க முற்பட்ட போது சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுங்கப்பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version