அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெண் ஊழியர்கள் சேலை, ஒசாரி என அழைக்கப்படும் கண்டியன் புடவை அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுற்று நிருபம் வெளியான பின்னர் பரிந்துரைக்கப்படும் ஆடைகளுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான பொருத்தமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் பயன்படுத்தும் புடவைகள் மற்றும் ஏனைய ஆடைகளின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version