உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டை ஒன்றின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 50 ரூபாயாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டை விலை திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.