ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

இதன்படி பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மகளிர் சிறுவர் விவகாரம் மற்றும் சமூகவலுவூட்டல் பதில் அமைச்சராக அநுப பஸ்குவல் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version