(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கடற்கரை சூழலை மாசுபடுத்தாது அதன் அழகைப் பேனுவோம் எனும் தொனிப்பொருளில் கல்முனை கடற்கரை பள்ளியை அண்டிய கடற்கரைப் பிரதேசத்தை இன்று காலையில் கல்முனையில் அமைந்திருக்கும் இலங்கை கடற்படையினர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்
இது தொடர்பாக வினவிய போது வாரத்தில் இரு நாட்களில் பிளாஸ்டிக் போத்தல்களையும் ஏனைய நாட்களில் உக்காப் பொருட்களையும் எமது படையினர் எமது முகாம் அமைந்துள்ள இக் கடற்கரை பிரதேசத்திலிருந்து அகற்றி இதன் சூழலை பாதுகாக்கின்றனர் என்றனர்.
இயற்கையை என்றும் மாசுபடுத்தாது அதன் அழகைப் பேணுவது எமது கடமையாகும்.
இதை கல்முனையில் இஸ்லாமாபாத் வாடி வீட்டு வீதியில் அமைந்திருக்கும் இலங்கை கடற்படையினர் அழகாகவும் முன்மாதிரியாகவும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பொது மக்கள் மற்றும் பொது நிருவணங்கள் நன்றியும் பாராட்டுக்களையும் கூறியதோடு இதை முன்மாதிரியாகக் கொண்டு ஏன் விளையாட்டுக் கழகங்கள் அமைப்புக்கள் மற்றும் இக்கடற்கரையில் விளையாடும் இளைஞர்கள் இப்பணியை தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்யக்கூடாது.