பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிய வருகிறது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதம தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஏற்கனவே ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமரின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப் படவுள்ளது.

Share.
Exit mobile version