இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகள் COVID தொற்றுக்கு உள்ளாகியிருப்பதே இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எனவே, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், அது குறித்து கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோரை அறிவுறுத்தினார்.

Share.
Exit mobile version