மருந்து பயன்பாட்டுக்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மருத்துவ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ தேவைக்கான கஞ்சா மூலிகையை உற்பத்தி செய்வதன் ஊடாக நாட்டிற்கு அதிகளவான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கஞ்சா மூலிகையின் ஏற்றுமதி பிரதிபலனை எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு வழங்க முடியும். சர்வதேச சந்தையில் மருத்துவ கஞ்சாவிற்கு 4 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான கேள்வி உள்ளது.

இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேற்கத்தைய ஆங்கிலேயப் பேரரசு காலத்தில் இந்த மருத்துவ செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.

எனவே அந்த பாரம்பரிய மருத்துவத்துடனேயே மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பற்றிய விவாதம் எழுந்தது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version