தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டால் திறைசேரிக்கு 100 பில்லியன் நஷ்டம் ஏற்படும் என்றும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினைக்கு பிரதான காரணம் மின்சார சபை எனவும்,வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அந்த சபைக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மின்சார சபையினால் சில காலங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version