நாடாளுமன்றில் இன்று (23) ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவில் நெத்தலி பொறியலில் ஒரு அடி நீளமான மூடை நூல் ஒன்று காணப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர் உணவு உண்ணும் போது இவ்வாறு நூல் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உணவுப் பிரிவின் பிரதானியிடம் இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதோடு, அந்த நூலையும் அவரிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உணவில் நூல் இருப்பதை அறிந்தவுடன் குறித்த ஊடகவியலாளர் உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, நேற்று (22) நாடாளுமன்றில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலிருந்து பழுதடைந்த மனம் வெளியானதாகவும் குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உணவுப் பிரிவிலிருந்து விநியோகிக்கப்படும் உணவுகளில் புழு, பிளாஸ்டிக், நூல் துண்டிகள் என்பன இதற்கு முன்னரும் காணப்பட்டதாகவும், நேற்றை உணவை உட்கொண்ட இரு பொலிஸ் அதிகாரிகள் உணவு விஷமானதால் நாராஹென்பிட்ட பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version