தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 4.2ஆவது கிலோமீற்றர் பகுதிக்கு வந்த நச்சு உடும்பு (கபரகொயா) ஒன்றை காப்பற்ற முற்பட்ட வேளையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த நச்சு உடும்பை லொறியொன்றின் சாரதி காப்பாற்ற நிலைத்து லொறியை திடீரென நிறுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த லொறியின் பின்னால் இருந்த பஸ்ஸான்றும், வேன் மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், மூவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சேதமடைந்த சகல வாகனங்களையும் கஹதுட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தெற்கு அதிவேக கெளனிகம போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் காமினியின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share.
Exit mobile version