யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் Audrey Azule மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் நியூயோர்க் சென்றுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு யுனெஸ்கோ வழங்கிய உதவிகளுக்கு கல்வி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

யுனெஸ்கோவின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version