2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் சான்றிதழை பெறுவது கட்டாயமில்லை என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கருத்து வெளியிடுகையில், பாடசாலை விண்ணப்பதாரி ஒருவர் பாடசாலை விண்ணப்பதாரியாக இருந்தால் அதிபரினால் வழங்கப்பட்ட பெறுபேறு சான்றிதழ் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்பாட்டின் கீழ் பணம் செலுத்தி பெறப்பட்ட பெறுபேற்று ஆவணத்தை உறுதிப்படுத்துதல் போதுமானது என தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு விண்ணப்பதாரியாக இருந்தால், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்படுத்தலின் கீழ் பணம் செலுத்தி பெறப்பட்ட பெறுபேற்று ஆவணமே போதுமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version