உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10 முதல் 13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி.சூரியகுமார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டங்களின் விலை குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு முக்கிய பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் இனிப்புகளின் விலையைக் குறைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவாலும், தாவர எண்ணெய் கிலோ ஒன்றின் விலை 250 ரூபாவாலும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version