அமெரிக்கா இலங்கைக்கு அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கர்லயா, சுகாதார அமைச்சுக்கு விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், வடிகுழாய்கள் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் அவசரமாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.
அதன்படி, எழு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் டொலர்கள் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.