Shorts வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானத்தில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு வழங்க போவதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் போல, குறுகிய வீடியோக்களை வெளியிடும் வகையில், யூ டியூப்பால் 2020ஆம் ஆண்டு Shorts தளம் அறிமுகபடுத்தப்பட்டது.
அதில் வெளியிடப்படும் வீடியோக்களை உலகம் முழுவதும் மாதத்துக்கு சுமார் 150 கோடி பேர் பார்வையிட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.