நேற்று (18) உள்நாட்டு பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று 10 இலட்சம் கிலோ மரக்கறிகளும் 5 இலட்சம் கிலோ உள்ளூர் வெங்காயமும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மரக்கறிகளின் மொத்த விற்பனை அதிகரிப்புடன் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், போஞ்சி மற்றும் கறி மிளகாய் தவிர மலையகம், தாழ்நிலம், யாழ்ப்பாணம் மற்றும் வடமேல் மாகாணங்களின் மரக்கறிகளின் கையிருப்பு குறைந்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.