கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கார்கிவ் பிரதேசம் விடுவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.