காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இது என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version