ஸ்கொட்லாந்து வான்பரப்பை இரவு நேரத்தில் மிகப்பெரிய எறிகல் கடந்து சென்ற வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் வானை கிழித்தபடி எறிகல் கடந்து சென்ற காட்சியை, பைய்ஸ்லே பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

முதலில் அந்த எறிகல், வானில் சுற்றும் செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தின் உடைந்த பாகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று பிரிட்டன் எறிகல் ஆய்வு மையம் கருதியது. ஆனால் சிறிது நேரம் கழித்தபிறகே, அது எறிகல் என்பதை அந்த மையம் உறுதிபடுத்தியது.

Share.
Exit mobile version