அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளராக செயற்படும் நாமல் ராஜபக்ச, கட்சி மாநாட்டின்போது தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கமைய கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு நாமலிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அந்த பணியை முழுமையாக முன்னெடுப்பதற்காகவே நாமல் ராஜபக்ச அமைச்சு பதவியை ஏற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Exit mobile version