நாடு பாரிய அவலத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் அதனால் தான் வீதியில் இறங்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்சினைகளால் மக்கள் அவலநிலையில் இருக்கும் போது தன்னால் வீட்டில் இருக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கத்தை அமைக்காமல் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முற்பட்டால், நாட்டின் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் அரசாங்கம் வரவேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை பார்க்கிறதா அல்லது மக்களை தெரிவு செய்ய விடுகிறதா என்பதை மக்கள் உற்று நோக்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருத்தமான அரசாங்கம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இறக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், நாடு முழுவதிலும் இருந்து தனக்கு உணவுப்பொருட்கள் கேட்டு அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்தார்.

காலி முகத்திடல் மைதானத்தில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆசி வழங்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version