எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மூலம் இயக்கப்படும் போயிங் கோ. 737-800 விமானம் நேற்று (புதன்கிழமை) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், அவசர நிலை ஏற்பட்டதில் விமானம் திரும்ப வரவழைக்கப்பட்டது.

மஸ்கட்டில் இருந்து கொச்சி வரை செல்லும் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இறக்கையில் புகை வருவதை மற்றொரு விமானத்தில் உள்ள விமானி கவனித்து தகவல் அளித்ததையடுத்து அவசர நிலையால் விமானம் தரையிறக்கப்பட்டது.

காக்பிட் பகுதியில் தீ பரவாததால் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளும் அதிக பாதிப்பில்லாமல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக, இந்திய சிவில் ஏவியேஷன் தலைமை இயக்குனரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார்.

Share.
Exit mobile version