2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரால் மேல்நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமனிடம் இந்த குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.