தற்போது கையிருப்பிலுள்ள Pfizer தடுப்பூசி எதிர்வரும் 6 வாரங்களில் காலாதியாகும் என இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி இந்த விடயம் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது 6 மில்லியனுக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள் கையிருப்பிலுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 15 சதவீதமான மக்களே நான்காவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட Pfizer தடுப்பூசிகளின் காலாவதி திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் விரைவாக நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது கொரோனா தொற்றுக்கான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து செயற்படுமாறும் முகக்கவசம் அணிந்து செயற்படுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.