நெலும் குளுனு என அழைக்கப்படும் தாமரை கோபுரத்தின் முதல் கட்டம் நாளை செப்டம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

113 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளம் மற்றும் சில பகுதிகள் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

டிக்கெட்டுகளின் விலை ரூ.2000 மற்றும் ரூ.500 என அறிவிக்கப்பட்டது., அதே நேரத்தில் பள்ளி சுற்றுலாவிற்கும் இது சிறப்பு கட்டணத்தில் திறக்கப்படும்.

இருப்பினும், தாமரை கோபுரத்தின் டிக்கெட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீன பிரஜைகளுக்கு விதிவிலக்குகள் பற்றிய தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இந்த விடயத்தை தெளிவுபடுத்திய கொழும்பில் உள்ள சீன தூதரகம், தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் டிக்கெட் போலியானது என தெரிவித்துள்ளது.

நாளை பொதுமக்களுக்கு வழங்கப்படும் தாமரை கோபுரத்தின் அசல் டிக்கெட்டின் படத்தை தூதரகம் மேலும் பகிர்ந்துள்ளது

Share.
Exit mobile version