கடந்த வாரம் ஆசிய சம்பியனாக மகுடம் சூடிய இலங்கை ஆடவர் கிரிக்கெட் மற்றும் மகளிர் வலைப்பந்தாட்ட அணிகளை வரவேற்கும் மாபெரும் வெற்றி அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 – 53 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணி ஆசிய வலைப்பந்து சம்பியனாக முடிசூட்டப்பட்டது.

இரு தேசிய விளையாட்டு அணிகளின் வெற்றிகளை வரவேற்று கொண்டாடும் வகையில் இன்று காலை மாபெரும் வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி நடத்தப்பட்ட வெற்றி அணிவகுப்பில் இலங்கை ஆண்கள் கிரிக்கட் மற்றும் பெண்கள் வலைப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.

இரு அணிகளுக்கும் தங்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் வழிநெடுகிலும் ஏராளமானோர் காணப்பட்டனர்.

Share.
Exit mobile version