உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 35,000 தோட்டப் பிள்ளைகள் உட்பட போசாக்கு குறைபாடுள்ள பிரதேசங்களில் உள்ள 155,000 முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி.சில்வா தெரிவித்தார்.

தற்போது, ​​90,000 போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதோடு, வழங்குநர்களுக்கு ஒவ்வொரு உணவுக்கும் 30 ரூபாய் வழங்கப்படுகிறது.

எனினும் அந்தத் தொகை போதாது என்பதால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் உரிய காலை உணவுக்கு பதிலாக தற்போதைய செய்முறையை திருத்தி மதிய உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்பக் குழந்தை அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி.சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,000 ரூபாய் சத்துணவுப் பொதி மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக 12 வாரங்கள் நிறைவடைந்த தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா ரூ.2,000 மதிப்பிலான சத்துணவு பை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version