இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுத்த அழைப்பின் பேரில் அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாடாளுமன்றத்தின் பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் அவரை வரவேற்றனர்.

அவர் தனது விஜயத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Exit mobile version