இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட 40 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Share.
Exit mobile version