உலகின் கொடுரமான பயங்கரவாத தாக்குதலான அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
குறித்த தாக்குதலில் இரட்டை கோபுரங்கள் இடிந்து வீழ்ந்ததுடன், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2001 ம் ஆண்டு 11 ம் திகதி பயங்கரவாதிகளினால் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மீதும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் 21 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியில் அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.