காபந்து அரசாங்கம் ஒன்றை நிறுவி பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குடிமக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் , நிபுணர்கள் பரிந்துரைத்தபடி இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராக நாடு திறந்த சந்தையில் இருந்து கடன்களைப் பெற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பெறப்பட்ட கடன்கள் நெடுஞ்சாலைகள், தாமரை கோபுரம், மாநாட்டு அரங்குகள், நடைபாதைகள் மற்றும் அத்தியாவசியமற்ற இடைச் சாலைகள் புனரமைக்க பயன்படுத்தப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தன என்றும், தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் காபந்து அரசாங்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Share.
Exit mobile version