போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமரிவின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version