தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் எரிசக்தி அமைச்சு இதுவரையில் எரிபொருள் ஒதுக்கீட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Share.
Exit mobile version