கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று (05) காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.