ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ கோஃப் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், நிக் கிர்கியோஸ், 7-6, 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கோஃப், சீனாவின் ஸாங் ஷுவாய்யுடன் மோதினார்.

இப்போட்டியில், கோகோ கோஃப், 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Share.
Exit mobile version