இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுனமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்று கலந்துரையாடலின் போது இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமரை நீக்குவது அல்லது ஜனாதிபதி விலகுவது குறித்து எந்த ஒரு விடயமும் பேசப்படவில்லை. தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி கூறினார்.

நாங்களும் உடனடியாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம்.

இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் ஒரு வருடமேனும் நீடிக்கும் என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version