400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுநாளுக்கான எரிபொருளை பெறுவதற்கு முந்தைய நாள் இரவு 9:30 க்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், அன்றைய நாளுக்கான பணவரவை கணக்கிட்டதன் பின்னர் பணம் செலுத்துவது அவர்களுக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய நாள் இரவு 9:30 க்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், அடுத்த நாள் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) எரிபொருளை வழங்காது . இதன் விளைவாக, சில நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குமார் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version