சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானத்துள்ளது.

இதன்படி நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பில் விரைவில் தீர்மானம்அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.

இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 246ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,ஆயிரத்து 664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது,

இதேவேளை 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால்குறைக்கப்பட்டு ஆயிரத்து ,872 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version