இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சரியான தீர்வுகளுக்காக இலங்கையுடன் கலந்தாலோசிப்பதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிக்கிறது.

ஜாவோ லிஜியன் – செய்தித் தொடர்பாளர், சீன வெளியுறவு அமைச்சகம்
செப்டெம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version