இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அது தொடர்பிலான விவாதம் 31ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.

இந்தநிலையில், இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தின் பின்னர் நடைபெற்றது.

இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 05. வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேரடங்கிய நாடாளுமன்ற குழு, தமிழ்த் தேசியக் கூட்டப்பு ஆகிய இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை.

Share.
Exit mobile version