கடுமையான நாடு தழுவிய சுற்றுப்பயணம், ஒரு டசன் பிரச்சாரம் மற்றும் மூன்று தொலைக்காட்சி விவாதங்களுக்குப் பிறகு, லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கான இறுதி வாக்கெடுப்பில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்கிற்கு எதிராக வெளியுறவு செயலாளரை நிறுத்தும் கோடைகால பிரச்சாரத்தின் முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் இறுதி வாக்கெடுப்பின் முடிவில் அவர், பதவியேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது
அதற்கு முன்னதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமாவை மறுநாள் இரண்டாம் எலிசபெத் ராணியிடம் முறையாக சமர்ப்பிக்கிறார்.
ஜோன்சன் இராஜினாமா செய்வதை அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, 200,000 டோரி உறுப்பினர்களால் அஞ்சல் மற்றும் ஒன்லைன் வாக்களிப்பு ஒகஸ்ட் தொடக்கத்தில் தொடங்கியது, மாலை 5:00 மணிக்கு இது முடிவடைகிறது.
உக்ரைனில் ரஷ்யாவின் போரின் பின்னணியில் எரிசக்தி விலைகள் உயர்வு, தலைமுறைகளில் மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடி என பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் லிஸ் ட்ரஸ் பதவியேற்கிறார்